“MEENDUM ORU KDHAADHAL KADHAI” Release Soon

0

“Meendum Oru Kadhal Kadhai” Movie Press Meet

"Meendum Oru Kadhal Kadhai" Movie Press Meet

“Meendum Oru Kadhal Kadhai” Movie Press Meet

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தட்டத்தின் மரியத்து படத்தின் ரீமேக் படமான மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் ட்ரைலர்

மற்றும் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் வால்டர் பிலிப்ஸ், நாயகி இஷா தல்வார், அர்ஜுன், வெங்கட்,

எடிட்டர், தியாகராஜன், இயக்குனர் மித்திரன் ஆர். ஜவகர், தயாரிப்பாளர் எஸ்.வி.டி.

ஜெயசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் ஆர்ட் டைரக்டர் விஜி பேசியதாவது, எனக்கு நிறைய பேச வராது, படம் வரைய

சொன்னா நல்லா வரைவேன். படத்த பாத்துட்டு சொல்லுங்க என்னோட வொர்க் எப்படி

என்று சுருக்கமாக பேசிமுடித்தார்.

அடுத்து பேசிய நடிகர் அர்ஜுன் கூறியதாவது, மித்திரன் ஜவகர் என்னை படத்தில் நடிக்க

அழைத்தவுடன், நான் ஏதோ தனுஷ் கூட தான் நடிக்க போறேன்னு கனவோட போனேன்.

ஆனால் ஹீரோ வால்டர் தான் எனச் சொன்னார். படத்துல ஹீரோவவிட எனக்கு தான்

காஸ்ட்லியான ட்ரெஸ். அந்த அளவுக்கு இயக்குனர் எனக்கு பார்த்து பார்த்து ட்ரெஸ்

செலெக்ட் பண்ணினார். கேமரா மேன் விஷ்ணு இங்க வரலை. அவருக்கு நன்றி. அவ்வளவு

அழகா விசுவல் பண்ணிருக்கார் எனக் கூறி முடித்தார்.

அடுத்து பேசிய படத்தின் நாயகன் வால்டர் பிலிப்ஸ், படத்தில் பணியாற்றிய ஒருவரை

விடாமல் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் படத்தை பற்றிய நிறைய விசயங்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதாவது,

ரொம்ப நாளா ஒரு நல்ல கதைக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எனக்காக தாணு சார்நிறைய ஸ்க்ரிப்ட் அனுப்பினார். விஜய்யை விட உனக்கு தான் அதிகமாக ஸ்க்ரிப்ட்

அனுப்பிருக்கேன் எதுவுமே பிடிக்கலையா எனக்கேட்டார். பின்ன நானே இந்த படத்தோட

ஸ்கிரிப்ட் பிடிச்சிருக்கு என தாணு சார் கிட்ட சொன்னேன். உடனே எதுவுமே சொல்லாம

உனக்கு பிடிச்சிருக்குல கண்டிப்பா நல்லா இருக்கும் பண்ணு என உற்சாகப்படுத்தினார்.

அடுத்து சங்கிலி முருகன் அவருக்கும் நன்றி சொல்லணும். அவர் இந்த படத்துக்காக நிறைய பண்ணிருக்காரு. இந்த வயசுலயும் இவ்ளோ என்னர்ஜியா இருக்காரு. இயக்குனர் ஜவகர்,

நான் ஒரு புது ஹீரோ என ஒரு நாளும் நினைக்கவில்லை. எவ்வளவு ப்ரீடம் கொடுக்க

முடியுமோ அவ்ளோ கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லணும். மேலும் கேமராமேன்

விஷ்ணு அவ்வளவு அழகா ஒளிப்பதிவு செஞ்சிருக்கார். இஷா தான் இந்த படத்துல நடிக்கனும்மு ன்னவே பிக்ஸ் பண்ணிட்டோம். ஆனா அவங்க நடிக்க ஒத்துப்பாங்களானு ஒரு டவுட். நிறைய பேரை ஆடிசன் வச்சோம். ஆனா ஒருத்தர் கூட செட் ஆகலை. வேற வழியில்லாம இஷா கிட்டவே கேட்டோம். முதல்ல ஒரு சின்ன தயக்கம் அவருக்கு. என் கூட நடிக்கனுமானு,பின்ன சரின்னு சொல்லிட்டாங்க. ஒரு புது ஹீரோவோட நடிக்கிறோம்னு எந்த ஒரு அலட்டலும் இல்லை. அவ்வளவு நன்றாக பழகினார்.

இயக்குனர் ஜவகர் பேசியதாவது, முதல்ல தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் பத்திதான்

சொல்லணும். இப்படி ஒரு அன்பானவர நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு நன்றாக

பழகக்கூடியவர். தாணு சார் இந்த படத்தை பண்ணுறார்னு சொன்னதுமே எனக்கே

ஆச்சரியம். அவரு பேரை பெரிய பெரிய படத்தோட பேனர்ல பார்த்துட்டு, இப்போ நம்ம

படத்தோட பேனர்ல பாக்கும்போது ஒரு நம்பிக்கை வந்திடுச்சு. தாணு சாருக்கும் நன்றி

சொல்லணும். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் போது சொல்லிட்டே இருப்பாரு. யாரடி

மோகினி படத்துல வர்ற, எங்கேயோ பார்த்த மயக்கம் பாடல் மாதிரியே, இந்த பட்டையும்

எடுக்கணும் சொல்லிட்டே இருப்பார். கண்டிப்பா எடுக்குறேன்னு சொல்லி அவர்ட இசையை வாங்குனேன்.

மலையாள படத்தை அப்படியே ரீமேக் பண்ணலை, அது ரொம்ப போர். தமிழுக்கு என்ன

தேவையோ அத எல்லாம் சேர்த்து எடுத்துருக்கேன். இதுக்கு முக்கிய காரணம் என்னோட கோ டைரக்டர் ஜீவன் தான். அவரு இந்த படத்துக்காக என்னோட சேர்ந்து நிறைய

உழைச்சிருக்காரு. மேலும் என்னோட உதவி இயக்குனர்களுக்கும் நன்றி. கேமரா மேன்

விஷ்ணுவுக்கும் நன்றி எனக்கூறினார்.

நடிகை இஷா தல்வார் கூறியதாவது, மலையாள படம் என்னோட முதல் படம். அந்த படத்துல நடிச்ச அதே பீலோட தான் இந்த படத்துலயும் நடித்தேன். இந்த படத்தின் மூலம் மீண்டும்தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளேன். இதற்கு வால்டருக்கும், ஜவகருக்கும் நன்றி சொல்லணும்என பேசினார்.

Movie News

ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக உள்ளது. பொதுவாக

இசைவெளியீடு விழாவில் பத்திரிக் கையாளர்களுக்காக ஒன்று, இரண்டு பாடல்கள் மட்டும்

தான் விசுவலுடன் ஒளிபரப்புவார்கள். ஆனால் இந்தப்படத்தில் அனைத்து பாடல்களையும்ஒளிப்பரப்பினார்கள். ஒவ்வொரு பாடலும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. அனைத்துமே

நம் மூட்-யை மாற்றாமல் ஒரே மூட்-ல் பாடலை கேட்க வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

படத்தை பம்பாய் படம் போலவே, எடுத்துள்ளனர். ஒவ்வொரு விசுவலும் பம்பாய் படத்தை

நினைவு படுத்துகின்றன. இந்த படம் தட்டத்தின் மரியத்து படத்தின் ரீமேக்கா இல்லை,

பம்பாய் படத்தின் ரீமேக்கா என நினைக்கும் அளவிற்கு ஒளிப்பதிவில் அசத்தியுள்ளார்

விஷ்ணு.

ரீமேக் படங்களை நச் எடுப்பதில் கை தேர்ந்தவர் மித்ரன் ஜவகர். இந்த படத்தை சொல்லவா

வேண்டும். ட்ரைலரை பார்க்கும்போதே முழுப்படத்தையும் இப்பொழுதே பார்த்துவிட

வேண்டும் என எண்ணத்தோன்றுகின்றது.

படத்தின் நாயகன் வால்டர் பிலிப்ஸ்கும், நாயகி இஷா தல்வாருக்கும் அப்படி ஒரு ஜோடி

பொருத்தம். அரவிந்த் சாமிக்கும் மனிஷா கொர்யாலாவிற்கும் இருந்த ஜோடி பொருத்தம்

போல், துளி கூட குறையாமல் இவர்களுக்கும் உள்ளது. தில்லு முள்ளு படத்தில் நடித்த

இஷாவா இது என்கின்ற அளவிற்கு நம்மை வியக்க வைத்துள்ளார். மலையாள ரசிகர்களின்

தூக்கத்தை தொலைக்க வைத்த இஷா, விரைவில் தமிழ் ரசிகர்களின் தூக்கத்தையும்

தொலைக்கவிடுவார். மேலும் படத்தை பற்றி சொல்ல இன்னும் ஏராளம் உள்ளது.படத்தை

பார்த்துவிட்டு நீங்களே மிச்சத்தை கூறுங்களேன்.

படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட உள்ளார்.

mokk mokk1 mokk2

 

Share.

Comments are closed.