Fasting by Vannier Presidents 

0

Fasting by Vannier Presidents

Vannier.வன்னிய உள்தனி ஒதுக்கீடு வழங்க தமிழக அரசைவலியுறுத்தி 40 -க்கும் மேற்பட்ட வன்னியர் தலைவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

வன்னியர் சத்திரிய கூட்டு இயக்கம் மற்றும் 40-க்கும் மேற்பட்ட வன்னியர் : சங்கங்களின்,தலைவர்கள் மற்றும், பிரதிநிதிகள் வன்னியர் குல சத்திரிய சமூகத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க தனி உள் ஓதுக்கீடு (MBC V) வழங்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு பொறியாளர்
சி.ஆர்.ராஜன் தலைமையிலும், இராம.நாகரத்தினம், வழக்கறிஞர் உதயகுமார், மற்றும் 40 – அமைப்புகளின் தலைவர்கள் முன்னிலையில் உண்ணாவிரதம் நடைப்பெற்றது.

உண்ணாவிரத்தில் இயற்றப்பட்ட தீர்மானம்
*உழைப்பாளர் கட்சி, நடத்தி வந்த, சமுதாய பெருந்தலைவர், எஸ்.எஸ். ராமசாமிபடையாட்சியார் அவர்கள், வன்னியர் குல சத்திரிய, சமூகத்திற்கு,கல்வி வேலை-வாய்ப்பில், மாநிலத்தில், 20%சதவீகிதம், மத்தியில் 2%சதவீகிதம்,பெற வேண்டும் என்பது, அவர்களின் தலையாய கோரிக்கையாகும்.*

*அதனைத் தொடர்ந்து, சமூக நற்பணி மன்றத்தின் செயலாளர் ஏ.கே.நடராஜன் அவர்கள் மூலம், 1980ல் உருவான வன்னியர் சங்கம், அதே கோரிக்கையை, முன்னெடுத்து,பட்டை நாம பட்டினி போராட்டம்,ஒரு நாள், சாலை மறியல், #ஒரு நாள், ரயில் மறியல், #ஒரு வார சாலை மறியல் போன்ற, பல போராட்டங்களை,நடத்தியும்,25 உயிர்களை பலிகொடுத்த பின்,1989ல், தி.மு.க ஆட்சியில், கலைஞர் மு.கருணாநிதி அவர்களால்,தனிப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு,தனி இட ஒதுக்கீடு வழங்க, சட்டத்தில் இடமில்லை என்று கூறி, மிகவும் பிற்ப்பட்டோர் மற்றும், சீர்மரபினரை,உள்ளடக்கிய, வன்னியர் உள்ளிட்ட, 108 ஜாதிகளுக்கு ,M.B.C என்ற பிரிவை ஏற்படுத்தி,20%சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினார்.* இன்றைக்கு MBC பட்டியலில் முன்னேறிய சமுதாயங்களும் ஒன்றன் பின், ஒன்றாக சேர்க்கப்பட்டு 118 உயர்ந்துள்ளது

*தி.மு.க ஆட்சியில் கலைஞர் அவர்கள்தான் 2009ல் முஸ்லிம்களுக்கு, பிற்ப்பட்டோர் பிரிவில், BC(M)என்ற பிரிவை ஏற்படுத்தி, 3.5%சதவிகித உள் இட ஒதுக்கீடும், அருந்ததியர்களுக்கு, SC பிரிவில், SC(A) என்ற உருவாக்கி,3%சதவிகித, உள் இட ஒதுக்கீடும் வழங்கினார்.*

*இதன் அடிப்படையில்தான், ஆண்ட பரம்பரையான அருதிப் பெரும்பான்மை சமூகமான, வன்னியர் குல சத்திரியர்கள், கல்வி பொருளாதாரத்தில் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருப்பதால்.20 சதவிகித, MBC இட ஒதுக்கீட்டில், MBC(V) என்று உள் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்

*இதனை உணர்ந்த கலைஞர் அவர்கள், 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், “நான் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு, உள் தனிஇட ஒதுக்கீடு, வழங்குவேன் என்று, உறுதியளித்தார்.*

*2011ஆம் ஆண்டு நடந்த, சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதா அவர்கள் தலைமையில்,அ.தி.மு.க ஆட்சி அமைந்தது.*

*சென்னை உயர்நீதிமன்றம், வன்னியர் சமுதாயத்திற்கு,உள் இட ஒதுக்கீடு வழங்க, பரிசீலிக்க வேண்டும் என்று, பிற்ப்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு, உத்தரவிட்டது.*

*அந்த உத்தரவின் அடிப்படையில்,பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர், நீதிபதி ஜனார்த்தனம் அவர்கள் வன்னியர்களுக்கு, MBC(V) என்று உள் இட ஒதுக்கீடு, வழங்கலாம் என, பரிந்துரைக்கப்பட்டது.*

*அதன் அடிப்படையில்,தமிழக அரசுக்கு உட்பட்ட,* *பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்* *பிற்ப்படுத்தப்பட்டோர் நலத்துறையால்,* *GO(MS)NO35/2012, கடித எண் : 111/TNBCC /2012 மூலம்,உள் இட ஒதுக்கீடு, வழங்குவது குறித்து, அரசாணை வெளியிடப்பட்டது.*

*மேற்க்கண்ட உத்தரவு, ஏறக்குறைய8 ஆண்டுகள்ஆகியும் ஆட்சியாளர்களால் அமுல்படுத்தப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.*

*இதனை அமல்படுத்த வேண்டுமென,தமிழக முதல் அமைச்சரை வன்னியர் சத்திரிய சாமராஜ்யம் தலைவர் C.R.ராஜன் அவர்கள் தலைமையில்,வன்னியர் சமூக தலைவர்கள்,தமிழக முதலமைச்சரை,நேரில் சந்தித்து, மனு அளித்து, வலியுறுத்தியுனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு முன்பு, தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர் சமுதாயத்திற்கு என் தந்தை உறுதியளித்து போல் தனி உள்ஒதுக்கீடு வழங்குவேன் என்று விரிவான அறிக்கையின் மூலம் உறுதியளித்தார்,
அதை அப்பொழுது பலர் கிண்டலும், கேலியும் செய்து விமர்ச்சித்தனர், இப்பொழுது அதையே வலியுறுத்தியும் வருகிறார்.
*
இது சம்மந்தமாக சட்ட அமைச்சர் மாண்புமிகு சி.வி. சண்முகம் அவர்கள் உள்ளிட்ட, சமுதாய அமைச்சர்களை சந்தித்து ,தொடர்ந்து வலியுறுத்தியும் வந்த நிலையில், எப்படியேனும்,உள் இட ஒதுக்கீடு கிடைத்து விடும் என்ற நிலையில், திடீரென்று இப்போது அதற்கு முட்டுக்கட்டை போட்டு, தமிழக முதலமைச்சர் அவர்கள் தடுத்து நிறுத்தும் வகையில் போகாத ஊருக்கு வழி சொல்வதுபோல சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஒரு குழு போட்டுள்ளார்

 

*கலைஞர் அவர்கள் இரண்டு சமூகங்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் போது எந்தவித குழுவையும் அமைக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தான் வழங்கினார்.*

*அதன் அடிப்படையில்தான், வன்னியர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமே தவிர, கிடப்பில் போடுவதற்கு அல்ல.*

*தமிழக முதலமைச்சரின் இச்செயல் வன்னியர் சமூக மக்களின் இதயத்தில், “ஈட்டியை” பாய்ச்சியதை போன்று, அமைந்துள்ளது. இது மிகப்பெரிய வரலாற்று பிழையாகும் என்பதை, இக்கூட்டம் தனது கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.*

இன்னும் காலம் கடந்து விடவில்லை, வன்னியர் குல சத்திரியர் சமுதாயத்திற்கு தனி உள்ஒதுக்கீடு வழங்கினால் நன்றியுள்ளவன்னிய சமுதாயம் என்றைக்கும் நன்றியுள்ளவர்களாக இருப்பதோடு அவர்களை அரியனையில் அமர்த்துவோம்.
வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வட தமிழகத்தில்தான் 120 சட்டமன்ற தொகுதி உள்ளது. ஒரு கட்சி ஆட்சியில் அமர வேண்டும் என்றால், யார் கையில் இருக்கிறதுஎன்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது யில்லை.

சாதியை வைத்து நாங்கள் அரசியல் லாபம் பெற நினைக்கவில்லை
சாதியை வைத்து சமுதாயத்திற்கு சாதிக்க நினைப்பவர்கள் நாங்கள்.

எங்களின் கோரிக்கையை ஏற்றுவன்னியர் பொது சொத்து நல வாரியத்தை ஜனாதிபதி ஓப்புதலோடு சட்டமாக்கியும்,ஐயா எஸ்.எஸ்இராமசாமி படையாட்சியார், பிறந்த நாளை அரசு விழவாகும், அவருக்குமணிமண்டபம் ,சட்டமன்றத்தில் பட திறப்பு இதற்கு முழு முயற்சி எடுத்த தந்தை வழியில் நான் என்று பொது நலனும் முக்கியம், தான் சார்ந்த கட்சிக்குசமுதாய கோரிக்கைகளையும் செய்து கொடுத்து அதன் மூலம் வெற்றி கனியை பறிக்க வேண்டும். என்று சமுதாய உணர்வுமிக்க அமைச்சர் ” அறிஞர் “மாண்புமிகு , சி.வி.சண்முகம் அவர்களுக்கும், தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும் கோடன கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

உண்ணாவிரதப் போராட்டத்த்தில் ஆதரவு அளித்து பங்கேற்ற அனைத்து, வன்னிய நல அமைப்புகளுக்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

Share.

Comments are closed.