HBD Legend Singer K.J.Yesudoss

0

HBD Legend Carnatic & Cine Playback Singer K.J.Yesudoss.

 

 

 

 

 

என்னவொரு அசாத்திய பயணம்…

1961ல் பொம்மை படத்தில் பாடியபோது இவரின் குரலை யாரும் கண்டுகொள்ளவில்லை..1964ல் காதலிக்க நேரமில்லை என்ற பிளாக் பஸ்டரில் பாடியபோதும் சரி, பறக்கும்பாவையில் சந்திரபாபுவுக்காக பாடியபோதும் சரி.. என்ன துரதிஷ்டமோ, ஏறுமுகமே இல்லை..

ஆனால் எழுபதுகள் கைவிடவில்லை. உலகம் சுற்றும் வாலிபனின்,, தங்கக்தோணியிலே, உரிமைக்குரலின் விழியே கதை எழுது..டாக்டர் சிவாவின் மலரே குறிஞ்சி மலரே ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ரெக்கார்டுகளிலும் ரேடியோக்களிலும் ஒலிக்க நிலைமையே மாறிப்போனது.

எம்ஜிஆருக்காக பாடிய அத்தனை பாடல்களும் செம ஹிட்டாக அமைந்தன.. இன்னொரு பக்கம் ஹிந்தியில் சிட்சோர் படத்தின் பாடல்கள் தேசம் முழுவதும் காதுகளை இவர் வசம் கொடுத்துவிட்டதால் இந்தி திரையுலகிலும் கொஞ்சம் சாம்ராஜ்யம் விரிந்தது.

முள்ளும் மலரும் படத்தின் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடல், அந்தமான் காதலியின், நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் பாடல் போன்றவை இன்னும் ஒரு படிமேலே கொண்டுபோய்விட்டது.

70களின் பிரபலமாகாத படங்களில் இவரில் பாடல்கள் மட்டும் தனியாக பேசவைத்து மாஜிக் செய்தன..

உன்னிடம் மயங்குகிறேன்….
தானே தனக்குள் ரசிக்கின்றாள்,..
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்.. காஞ்சிப்படுத்தி கஸ்தூரி பொட்டு வெச்சி..

தேன்சிந்துதே வானம், பேரும் புகழும், யாருக்கும் வெட்கமில்லை, வயசுப்பொண்ணு என மேற்படி பாடல்க ளின் படங்களை சொன்னால் பலருக்கும் தெரியாது..இதுபோல எவ்வளவு படங்களில் எவ்வளவு பாடல்கள்..

ரஜினி, கமல் படங்களில் பாட ஆரம்பித்தபிறகு பிந்தைய தலைமுறையை ஆட்டிப்படைக்கவே செய்தார்.

வெள்ளைப்புறா ஒன்று…ஊரைத் தெரிஞ்சிகிட்டேன் போன்ற சோக ராகங்கள் 80களில் தமிழ் ரசிகர்களின் சுய பச்சாதாபத்துக்கு நன்றாகவே தீனிபோட்டன.

பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 40 ஆயிரம் பாடல்களை பாடிய இந்த கிறிஸ்துவனின் குரல்தான் குருவாயூரப்பனுக்கும் ஐயப்பனுக்கும் பாடல் டிரேட் மார்க்காய் இன்றளவும் இருந்துவருகிறது..

ஏழு முறை தேசிய விருதுபெற்ற கே.ஜே.யேசுதாசுக்கு இன்று 80 வது பிறந்தநாள்..

 

*மந்திரக் குரலோன்*
*கே.ஜே.ஜேசுதாஸ்* அவர்களுக்கு இன்று (10.01.2021) பிறந்தநாள்!

இந்திய பாடகர்களில் அவர் ஒரு ஆச்சரியம், அவரின் குரலும் இசையும் தெய்வம் கொடுத்த வரம். அவர் பிறப்பால் ஒரு கத்தோலிக்கர், தந்தை ஒரு பாடகர் எனினும் அதை தாண்டி இந்திய இசை அடையாளமாக அவர் தன் வட்டத்தை மீறி வந்து வரலாறு படைத்ததெல்லாம் அவரின் முற்பிறவியின் பலன்

ஆம் கிட்டதட்ட 24 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்களை பாடி 60 வருடமாக களத்தில் நிற்பதெல்லாம் மிக பெரும் சாதனை

கட்டச்சேரி ஜோசப் ஜேசுதாஸ் எனும் கே ஜே ஜேசுதாஸ்

அவர் கத்தோலிக்க கிறிஸ்தவராக இருந்தாலும் செம்பை பாகவதர் எனும் இசைமேதையிடம் தன்னை கூர் தீட்டி கொண்டா, செம்பை பாகவதரும் அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதால் அவரை மறுக்கவுமில்லை

ஞானி இன்னொரு ஞானியினை உருவாக்குவது போல அந்த இசைமேதை ஜேசுதாஸ் எனும் மாபெரும் கலைஞனை பட்டைதீட்டினார்.

அதன் பின் ஒளிர ஆரம்பித்தார் ஜேசுதாஸ், மலையாள பாடகரான அவர் பாலசந்தரின் படம் ஒன்றில் “நீயும் பொம்மை நானும் பொம்மை” என பாடி நுழைந்தார்

இசை தேவதையின் கைபொம்மையாக அப்படி பாடித்தான் வந்தார் ஜேசுதாஸ், பின் தமிழகம் அவரை கொண்டாடியது, அன்று ஏறிய கொடி இன்றுவரை இறங்கவில்லை

கர்நாடக சங்கீதம் அவருக்கு அமெரிக்க கணிணிகள் போல மகா துல்லியமாக இறங்கி வந்தது, மிக மிக சுத்தமாக அட்சரம் பிசறாமல் பாடினார், ஒருகாலமும் ஒரு பிசிறையும் யாராலும் அதில் கண்டறிய முடியவில்லை, எந்த கொம்பனாலும் முடியவில்லை

எல்லா காலநிலையிலும் பறக்கும் வெகு சில பறவைகள் போல, எல்லா கடலிலும் நீந்தும் சில வகை மீன்கள் போல எல்லா ராகங்களிலும் தாவி நீந்தி வந்த ஒரு அபூர்பபாடகர் அவர்

எந்த தாளமும் ராகமும் அவருக்கு சிக்கலே இல்லை, பனியில் சறுக்கி செல்லும் வித்தை போல அவர் ராகங்களில் அவ்வளவு அழகு காட்டுவார்

தமிழகத்தில் எவ்வளவோ பாடகர்கள் உண்டு

சீர்காழியின் குரல் வெண்கல குரல், சவுந்தராஜனின் குரல் ஆண்மை மிக்கது, பாலசுப்பிரமணியத்தின் குரல் தங்க தூணில் தட்டுவது போன்ற இனிமை

ஜேசுதாஸின் குரல் தெய்வீக குரல், அது ஆலயமணி போன்ற ஒருமாதிரி வசீகர குரல், கேட்டமாத்திரத்தில் உருகவைக்கும் ஒரு பக்திமிக்க குரல்.

அந்த‌ தெய்வீக குரல் என்பது சிலருக்கே வாய்க்கும்,அக்குரல் அமைவது அபூர்வம். அமைந்தாலும் அதை ராகங்களில் இசைத்து பாடுதல் என்பது இன்னும் அபூர்வம்

அவ்வகையில் ஜேசுதாஸ் மகா அற்புதமான பாடகர், கிட்டதட்ட 60 வருடங்களுக்கு மேலாக பாடிகொண்டிருப்பவர்

அவரையும் தமிழ் திரை இசைபாடல்களையும் பக்தி பாடல்களையும் ஒரு காலமும் பிரிக்க முடியாது.

அழியாத பல பாடல்களை பாடியிருக்கின்றார், கண்ணதாசன், வாலி போன்றோரின் வரிகள் அவரின் குரலால் கல்வெட்டாக பதிந்து நிற்கின்றன‌

தமிழ் பாடல் அவர் குரலில் வரும்பொழுது பூ எடுத்து தேனில் நனைத்து காதில் ஊற்றுவது போல் அப்படி ஒரு சுகாந்தம் கிடைக்கும், அக்குரல் உள்ளிரங்கும்பொழுதே ஒரு சிலிர்ப்பும் அமைதியும் ஏற்படும்

சினிமா பாடல்களை விட அவரின் பக்திபாடல்கள் உருக வைப்பவை

ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல?

பாடகர்களால் படத்தை வெற்றிபெற செய்யமுடியும் என்பதற்கு எடுத்துகாட்டு ஜேசுதாஸ், சிந்துபைரவி என்ற படமே ஜேசுதாஸின் பாடலால் நின்றது, மறக்க முடியாது

எழுதினால் எழுதிகொண்டே செல்லலாம், மனிதரின் முத்திரை அவ்வளவு வலுவானது

மனதிற்கு பெரும் நிம்மதியும், உருக்கமும் கொடுக்கும் குரல் அந்த ஜேசுதாசுடையது

அந்த முகம் போலவே அக்குரலும் அமைதியானது, பாடும் பொழுது எவ்வித சலனமும் அவரிடம் இருக்காது, தியானத்தில் பாடுவது போன்றே தோன்றும்

கர்நாடக சங்கீதம் கடவுளை பாட மட்டும் உருவானது என்பது அவர் பாடும்பொழுது அவ்வளவு அழகாக புரியும்.

அவர் வணங்கும் சபரிமலை அய்யப்பன் ஆசியுடன் வாழ்வாங்கு வாழட்டும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

*Pls …. Comment ur Favsong of K.J.Yesudass*

பல பாடல்கள்…..
1)ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்…….
2) ராஜ ராஜ சோழன் நான்….
3) கனவு காணும் வாழ்க்கை யாவும்…
4)கண்ணே கலைமானே….
5)செந்தாழம் பூவில்…..
6)அரிவராசனம்….
7) ஸ்ரீமன் நாராயணா பத்ரி நாராயணா…
8) சரணம் ஐயப்பா…
9)ஒரு பொம்மலாட்டம் நடக்குது….
10)பூ மாலை வாங்கி வந்தேன்…
11)பூவே செம்பூவே….
………………….
இப்படி எண்ணற்ற பாடல்களை பாடி மயக்கிய
மந்திரக் குரலோன்
கே.ஜே.ஜேசுதாஸ்!
(நன்றி: கவுதம் நாத் FB)

 

 

Share.

Comments are closed.